அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இன்றும, நாளையும் உச்சபட்ச வெயில் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 30 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. அனல் வீசும் என்பதால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது.... அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும். வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.