தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களுக்கு அலைபேசி எண்ணை அறிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மாவட்டத்தில் 17.05.2024, 18.05.2024, 19.05.2024 ஆகிய தினங்களில் ஆரஞ்சு அலட் எச்சரிக்கையும், 20 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இதனால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் ஆர்வி சஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.



தேனி மாவட்ட பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்தில் இருக்கும் மாறும் மழை நேரங்களில் மரங்கள் மின்கம்பங்கள் நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க | குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!


மேலும் இயற்கை பேரிடர் தொடர்பான பொதுமக்கள் தங்கள் புகார்களை ஜீரோ நாலு இயற்கை பேரிடர் தொடர்பான பொதுமக்கள் தங்கள் புகார்களை 04546-250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


மேலும் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 66 தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அவை அமைக்கப்பட்டு பொது மக்களிடம் புகார்கள் பெற்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.


தேனி மாவட்டத்தில் தற்போது தேனி நகர் பகுதியான அன்னஞ்சி, அல்லிநகரம், அரண்மனைபுதூர், பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


பொதுமக்கள் வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 04546 - 250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


 


மேலும் படிக்க | தவறை உணர்ந்துவிட்டேன்... சவுக்கு சங்கரின் பரபரப்பு வாக்குமூலம் - முழு விவரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ