நீலகிரி மாவட்டத்துக்கு இந்த மூன்று நாட்கள் போகாதீங்க - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டத்திற்கு 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி  பயணத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2024, 01:50 PM IST
  • நீலகிரியில் கனமழை எச்சரிக்கை
  • 18 முதல் 20 ஆம் தேதி வரை ஆரஞ்சு ஆலெர்ட்
  • சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம்
நீலகிரி மாவட்டத்துக்கு இந்த மூன்று நாட்கள் போகாதீங்க - மாவட்ட ஆட்சியர் உத்தரவு title=

தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு 18, 19, 20 ஆகிய மூன்று தினங்களில் கன மழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளோடு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா மழை பாதுகாப்பு முன்னேற்ப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் வருவாய் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை முடித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 18,19, 20 ஆம் தேதி நீலகரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்திற்க்கு 18,19,20 கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கனமழை சமயங்களில் பணியாற்ற முதல் நிலை பணியாளர்களாக 3500 பேர் தயார் நிலையில் உள்ளனர். 456 தற்காலிக புயல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது மேலும் மாவட்டம் முழுவதும் துரித நிலையில் செயல்பட 25 தீயணைப்பு துறை வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. 100 ஜேசிபிகள் உள்ளது. 25 ஆயிரம் மடல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவ மற்றும் மருத்துவத்துறை சம்பந்தமான அனைத்து பணிகளுக்காகவும் மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மூன்று நாட்களுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு அவசர காலங்களில் செயல்பட பாதிப்பு நிறைந்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் மற்றும் பெரியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னேற்றத்திற்கு நடவடிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18, 19, 20 ஆகிய மூன்று தினங்கள் கனமழைக்கான ஆரஞ்சு அலாட்டு விழக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று தினங்களில் நீலகிரிக்கு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்தார்.

மேலும் படிக்க | பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News