இந்த 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை: வானிலை ஆய்வு மையம் ALERT
Rain Alert in Tamil Nadu: தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
TN Weather Today: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
நாளை மற்றும் நாளைமறுநாள் வானிலை நிலவரம்
வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
தேவாலா (நீலகிரி) 12, மேல் பவானி (நீலகிரி) 10, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 9, சின்கோனா (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி) 8, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்) தலா 7, நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்), அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) தலா 6, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 5, பெரியார் (தேனி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
க்ளென்மார்கன் (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்), திண்டிவனம் (விழுப்புரம்), தளி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 2, செஞ்சி (விழுப்புரம்), தேக்கடி (தேனி), குந்தா பாலம் (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), எமரலாடு (நீலகிரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), கலவாய் AWS (இராணிப்பேட்டை), வளத்தி (விழுப்புரம்), வல்லம் (விழுப்புரம்), அவலூர்பேட்டை (விழுப்புரம்), கல்லட்டி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 1 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தின் சில பகுதிகளில் இந்த வார இறுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
மீனவர்களுக்கான எச்சரிக்கை
12.07.2022: கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.07.2022 முதல் 16.07.2022 வரை: கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.07.2022, 13.07.2022: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.07.2022: ஆந்திர கடலோரப்பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.07.2022, 16.07.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: வனத்துறை அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த மான்.. இளைஞர்கள் சாலை மறியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR