வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தருமபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரிலும், நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் 20ம் தேதிக்கு மேல் மழையை எதிர்பார்க்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.