அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கன மழைக்கான வாய்ப்பு.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவிலும் (Kerala) அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
முன்னதாக, கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை (Rain) பெய்து வருகிறது. மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது டெல்டா மாவட்டங்கள், விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் நேற்று தெரிவித்தது.
ALSO READ: மழையை துல்லியமாக கணக்கிட உதவும் புதிய தொழில்நுட்பம்!
இது தவிர, புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையை (Chennai) பொருத்தவரை, நகரின் சில பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ALSO READ: வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் மஸ்கட் நகரம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR