தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோட்டு, தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


முக்கியமாக சூறைக்காற்று வீசவும் வாய்ப்புள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருச்சி. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூரில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு மேல் சென்னையில் மழை பெய்யலாம். 


சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும் என்று சென்னை வானிலை அறிக்கை கூறுகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு இதே வானிலை நிலவும் என்பதால் தமிழகத்தில் ஓரளவிற்கு தண்ணீர் பஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.