நெல்லை, விருதுநகர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகு மழையின் தாக்கம் குறையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


செவ்வாய்க்கிழமை பல்வேறு மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் மழையின் தாக்கம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவின் வடக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி கர்நாடகா நோக்கி சென்றதால், மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் மதுக்கூர், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.