சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை முதலே தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இடைவிடாது பரவலாக கனமழை பெய்து வருவாகிறது.


அதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி குடியிருப்புகளை சூழும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 



பரவலாக பெய்து வரும் கனமழையால், திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, உடை, மின்சாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


READ ALSO | பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த தகிடுதத்தம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR