பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த தகிடுதத்தம்

டிரெய்னேஜ் குழாயிலிருந்து ரூபாய் நோட்டுகள் வெளிவரும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது பொது மக்கள், அதிகாரிகள் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2021, 07:18 PM IST
பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த  தகிடுதத்தம் title=

Viral Video: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றச்சாட்டின் பேரில், கர்நாடகா முழுவதும், ஒரே நேரத்தில் 60 இடங்களில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர். இதில் கலபுர்கியில் உள்ள பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சாந்தா கவுடா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, கருப்புப் பணம் வெளிவந்த இடத்தைப் பார்த்து அனைவரும் வாயடைத்துப் போனார்கள். இந்த முழு விவகாரத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி வருகிறது.

ஏசிபி அதிகாரிகள் டிரெய்னேஜ் குழாயை ஆய்வு செய்தபோது, ​​அதில் பல லட்சம் ரூபாய் பணம் இருப்பதற்கான சந்தேகம் எழுந்தது. விசாரணையில் சந்தேகம் முற்றிலும் உண்மை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு குச்சியின் உதவியுடன் குழாயினுள் வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் வெளியே எடுக்கப்பட்டது. இதை செய்த உடனேயே, டிரெய்னேஜ் குழாய்க்குள் இருந்து நோட்டு மழை பொழிய ஆரம்பித்ததை வீடியோவில் காண முடிகிறது.

நீண்ட நேரத்திற்கு டிரெய்னேஜ் குழாயிலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. இவை ஒரு வாளியில் சேகரிக்கப்பட்டன. இளநிலை பொறியாளர் வீட்டில் இருந்து சுமார் 13 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடகிழக்கு ரேஞ்ச் ஏசிபி மகேஷ் மேகன்னாவர் கூறியபோது, ‘ஜூனியர் இன்ஜினியர் சாந்த கவுடா வீட்டில் இருந்து மொத்தம் ரூ.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.13 லட்சம் டிரெய்னேஜ் குழாயில் இருந்து எடுக்கப்பட்டது’ என்றார்.

வியக்கவைக்கும் இந்த வீடியோவை இங்கே காணலாம்:

கர்நாடகாவில் (Karnataka) பல்வேறு துறைகளில் பணிபுரியும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஏசிபி ஆதாரங்களின்படி, முதற்கட்ட சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளில், அதிகாரிகளின் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களின் ஆவணங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். செயல் பொறியாளர்கள், ஆர்டிஓ அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், திட்ட மேலாளர்கள், இணை இயக்குநர்கள், முதல் வகுப்பு எழுத்தர்கள் (எப்டிசி) மற்றும் ஒரு 'டி' குரூப் ஊழியர் ஆகியோரிடம் சோதனை நடத்தப்படுகிறது. இந்த அதிகாரிகள் வருவாய்த்துறை, பிபிஎம்பி, வேளாண் துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளனர். அரசு மருத்துவமனை பிசியோதெரபிஸ்ட்டிடமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ALSO READ:Viral Video: 19வது மாடி பால்கனியில் இருந்து விழும் 82 வயது பாட்டி! வீடியோ வைரல் 

யெலஹங்கா அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும் ராஜசேகர், பெங்களூரு அருகே தொட்டபல்லாபூர் தாலுகாவில் மூன்று பிடிஏ சைட்டுகள், இரண்டு வருவாய் சைட்டுகள் மற்றும் ஐந்து ஏக்கர் நிலம் ஆகியவற்றை வாங்கியுள்ளார் என்று ஏசிபி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக ஏசிபிக்கு கிடைத்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஊழல் மற்றும் வருமானத்துக்கு அப்பாற்பட்டு சொத்துக்கள் குவிந்ததாக பெருவாரியான புகார்கள் எழுந்துள்ள நிலையில், பெங்களூரு, கலபுர்கி, தாவாங்கேரே, பெலகாவி, மங்களூரு மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேடுதல் குழுவில் 8 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 100 அதிகாரிகள் மற்றும் 300 பணியாளர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளனர்.

டிரெய்னேஜ் குழாயிலிருந்து ரூபாய் நோட்டுகள் வெளிவரும் இந்த வீடியோ தற்போது வைரல் (Viral Video) ஆகி வருகிறது. இது பொது மக்கள், அதிகாரிகள் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ: Viral Video: திருமணத்தில் நடந்த சம்பிரதாயத்தில் எற்பட்ட குளறுபடி, செம்ம காமெடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News