Chennai: செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு 2000 கன அடியாக உயர்வு
சென்னைக்கு கன மழை எச்சரிக்கை செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு இரண்டாயிம் கன அடியாக உயர்வு
சென்னையில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. இதையடுத்து, கடந்த 7 ம் தேதி உபரி நீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரி நீர் திறப்பு 250 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 21.55 அடியாகவும், நீர்வரத்து 525 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட உள்ளதால், உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப் படுகிறது.
மேலும் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ள காரணத்தால் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
ALSO READ | வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; ‘இந்த’ மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
இதன் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை அறிக்கை (Weather Forecast) கூறுகிறது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.
கள்ளக்குறிச்சி மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும், மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று (Heavy Wind) மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
எனவே, சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உபரி நீர் திறப்பு அதிகரிப்பு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR