சென்னையில் இரவு முதல் கனமழை எதிரொலியாக கூவம் அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழை, அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. சென்னை அம்பத்தூர் மற்றும் புறநகர் பகுதிகளான திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து வீடுகளுக்குள் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள பானுநகரில் இரவு நேரத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் அம்மா உணவகத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் பணியாளர்கள் சமையல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. ஆவடி வசந்த நகரில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் பட்டாபிராம் கோபாலபுரத்தில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீரின் வரத்து அதிகரிக்கும் நிலையில் மழை நீர் வெளியேற வழியில்லாமல் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை இரவு முதல் தொடர் கனமழை காரணமாக கூவம்,அடையார் ஆறுகளில் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
புழல் ஏரியில் காலை 11 மணிக்கு 500கன அடி உபரிநீரும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு 500கனஅடி நீர்ரும் திறக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை நகரில் பல சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை மாநகர முழுவதுமே இருசக்கர வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்களின் நடமாட்டம் குறைத்து பல சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது. மின்சார சேவையும் அங்கங்கே பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்கும் புகுத்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Also Read | விஜய்சேதுபதியை தாக்கிய காரணம்! உண்மையை உடைத்த காந்தி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR