Chennai Rain Updates: சென்னை தற்போது காலையில் பெருநகரப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும்; ஈசிஆர், திருவான்மியூர், அடையாறு, OMR போன்ற பகுதிகளிலும் காலையில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளி - கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்


இதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கவலையடைந்துள்ளனர். இருப்பினும் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட அதனை சுற்றிய மாவட்டங்களில் மழை தரக்கூடிய மேகங்கள் உருவாகியிருப்பதால், தற்போது காலை 7 மணி நிலவரப்படி அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



வேலூர், திருப்பபத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மிதமான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல், அக். 23ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | டிரைவரே இல்லாமல் ஓடப்போகும் சென்னை மெட்ரோ ரயில் - இந்தியாவிலேயே முதல்முறை!



முன்பே கணித்த பிரதீப் ஜான்


மேலும், இன்று காலை மழை குறித்து தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நேற்று காலையிலேயே அவரது X தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில் அவர்,"நேற்று (அதாவது நேற்று முன்தினம் - அக். 16) மதியம் ஒரு துளி கூட மழை பெய்யவில்லை. மேகங்கள் இல்லாத காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லூருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு நிலை கடந்து செல்வது அங்குள்ள யாருக்கும் தெரியாது, ஏனென்றால் அதில் எதுவும் (மழை) மிச்சமில்லை, கடக்கும் நேரத்தில் வெயிலாக இருக்கும்.



சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் இன்று (அதாவது நேற்று) சூரியன் உச்சம் பெறும். காற்றழுத்த தாழ்வு பகுதி நிலப்பகுதிக்கு மேல் நகர்ந்து, சென்னை தற்போது அதன் தெற்கே உள்ளது. மேலும், மேற்கு பக்கத்தில் இருந்து தற்காலிக காற்று வீசும். எனவே இன்று (நேற்று) மாலை முதல் நாளை (இன்று) காலை வரை வெப்ப சலனம் மழை பெய்யக்கூடும். மேகங்கள் தரைப் பக்கத்தில் இருந்து நகரும், கடல் பக்கத்தில் இருந்து நகராது.


சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று (நேற்று) இரவு முதல் நாளை (இன்று) காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆங்காங்கே சாதாரண மழை பெய்யும். சில இடங்களில் மழை பெய்யும், சில இடங்களில் மழை பெய்யாது" என குறிப்பிட்டிருந்தார். எனவே தற்போது நகரில் பரவலாக பெய்து வரும் மழையை நாம் வெப்ப சலன மழை எனவும் புரிந்துகொள்ளலாம். 


புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி


வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக். 22ஆம் தேதி உண்டாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலில் அக். 20இல் உருவாக உள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதும் அது வடமேற்கு பகுதியில் நகர்ந்து வலுவடைய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பள்ளிக்கல்வித்துறை அதிரடி! அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. மாணவர்களுக்கு பரிசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ