தமிழகம், புதுச்சேரியில் இன்றும் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் வடமாவட்டங்களில் அனேக இடங்களிலும் தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் திருவளளூரில் 22 செ.மீ., பூண்டியில் 21 செ.மீ., அரக்கோணத்தில் 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரிரு மிதமான மழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெம்பலூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


சென்னையில் இடைவெளி விட்டு இடியுடன் மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு, அடுத்த 2 நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம். அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" என அவர் கூறினார்.