இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகம், கேரளாவில் கன மழை நீடிக்கும்: IMD
தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு அருகே இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 7-ஆம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், இன்று முதல் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை வரை அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 8 ஆம் தேதிக்கு பிறகு மழை குறை வாய்ப்பு இருக்கிறது எனக் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் கேரளா, தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு பகுதிகளில் அனேக இடங்களில் கனமழை முதல் மிக கனழை பெய்யும். குறிப்பாக வரும் 7 ஆம் தேதி கேரளா, தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மிக கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யக் கூடும். இதனால் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதி தமிழகம் கேரளா மாநிலங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை அளிக்கப்பட்டு உள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் 5 குழுக்கள் விரைந்துள்ளனர். இரண்டு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.