இன்னும் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெய்து கொண்டிருக்கும் சூழலில், அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் தகவலில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மட்டுமல்லாது திருப்பூர், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவித்திருக்கிறது. மேலும், 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டையில் அதிக மழை பதிவாகியிருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.
எந்தெந்த பகுதிகளில் மழையால் பாதிப்பு?
தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது என்றாலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கனமழையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல ஊர்கள் முற்றிலும் நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் மக்கள் இருக்கும் பகுதிகள் தனித் தீவாக மாறியிருக்கின்றன. சாலைப் போக்குவரத்து என்பது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிக்காப்டர் வழியாக மட்டுமே மீட்பு பணிகள் மேற்கொள்ளமுடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் பல இடங்களில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஏரி, குட்டை, குளங்கள் எல்லாம் நிரம்பியிருக்கின்றன.
அமைச்சர்கள் நேரில் ஆய்வு
இதனையொட்டி தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளனர். தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக மகளிர் அணி தலைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் முகாமிட்டு மீட்பு பணிகளை நேரடியாக கவனித்து வருகின்றனர். நீரால் சூழப்பட்ட பகுதிகளுக்கு படகுகள் வரவழைக்கப்பட்டு மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
மேலும் படிக்க | தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை - எங்கு அதிகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ