இன்றைய வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் & புதுவையில் மழைக்கு வாய்ப்பு!!
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு..!
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு..!
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கேரள கடலோர மற்றும் தெற்கு கன்னட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இதுதவிர காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனதரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.