கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டிற்காக ஹெலிபேட் அமைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆய்வுகளின் முடிவில் கொடைக்கானல் நகருக்கு மேலே அமைந்திருக்கும் சின்னபள்ளம் என்ற மலைப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக இறங்க ஹெலிபேட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய வான்வெளி போக்குவரத்துத்துறை நிபுணர் குழுவின் தலைவர் மார்கன் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழு அப்பகுதியை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். 



ஆய்வுக்கு பின்  குழுவின் தலைவர் மார்கன் செய்தியாளார்களிடம் பேசினார். தேர்வு செய்யப்பட்ட சின்னப்பள்ளம் பகுதி நடுத்தர ரக ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளது என்றும், அப்பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த பரிந்துரைத்து, இருபது நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். 


இதனிடையே, சின்னப்பள்ளம் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா ஏற்படுத்தப்பட இருப்பது குறித்து உள்ளூர் பொதுமக்கள் மகிழ்ச்சியும் தெரிவிக்க்கின்றனர். மேலும், பொதுமக்கள் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைக்கப்படுகின்றன. 


கொடைக்கானலில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா மேம்படுத்தப்பட்டால், சர்வதேச அளவிற்கு இந்த திட்டம் கவனம் பெறும் என்றும், அதனால் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வர வாய்ப்பு ஏற்படும் என்பதால் சுற்றுலா சார்ந்த தொழில்களும் அவற்றை சார்ந்திருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


தற்போது மருத்துவம் சார்ந்த அவரசர தேவைகளுக்கும் , மேல்சிகிச்சைக்கும் வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல அதிக நேரம் பிடிப்பதால் சில தருணங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தடுக்கும் விதமாக, ஹெலிகாப்டர்களை அவசர மருத்துவ  தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



அதோடு, தென்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தேவையான வசதிகளையும் (Tackle the worst situation) உள்ளடக்கிய ஹெலிகாப்டர் சேவையையும் கொண்டு வந்தால் வரவேற்போம் என்று மக்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் தெரிவிக்கின்றனர். 


இருப்பினும், சின்னப்பள்ளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வருவதால் ஏற்படக்கூடிய ஒலி மாசு, ஹெலிகாப்டரின் சப்தத்தால் வன விலங்குகள் அச்சமுறுவது, விவசாய பயிர்கள் காற்றினால் சேதமடைவது, வீடுகளில் அதிர்வு ஏற்படுவது குறித்தும்
ஆய்வு செய்து முறையாக இந்த சேவையை கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 


இவை அனைத்தையும் முறைப்படுத்தி கொடைக்கானல் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வருமேயானால் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல கொடைக்கானல் பொதுமக்களுக்கும் இது வரப்பிரசாதமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR