மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை விற்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2006-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாஅரசு முறை பயணத்திற்காக நவீன ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது. இரண்டு என்ஜின்களை கொண்ட பெல் 412 இ.பி. வகையை சேர்ந்த இந்த ஹெலிகாப்டரில் 10 பேர் வரை பயணம் செய்யலாம்.


இந்த ஹெலிகாப்டர் கடந்த மார்ச் மாதம் வரை பயன்படுத்தப்பட்டது. பிறகு பழுது அடைந்ததால் அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது அந்த ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது அந்த ஹெலிகாப்டரை பழுது பார்த்து பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.