போக்குவரத்து கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்கறிஞருக்கு உதவும் வகையில், ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென அனைத்து நிர்வாக இயக்குனர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சோமந்தர்குடியை சேர்ந்த பி. நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தனக்கு வரவேண்டிய பென்சன் வழங்கபடவில்லை என்றும், பணிக்கொடை, சேம நல நிதி, ஈட்டு விடுப்புத் தொகை ஆகியவற்றையும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகையால் தனக்கு சேர வேண்டிய பணிக்கால மற்றும் ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.


 இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து கழகம்  தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.


மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் 


அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுபோல தொடரப்படும் பல்வேறு வழக்குகளில் போக்குவரத்து கழகங்களின் தரப்பில் வழக்கறிஞர்களோ, சட்ட அதிகாரிகளோ ஆஜராவதில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு முடிவை எட்ட முடியாது என்றும், நீதி பரிபாலனம் செய்வதில் பாதிப்பைத் தான் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.


இதை கருத்தில் கொண்டு பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு வழக்கிலும், அதன் நிர்வாக இயக்குனர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற குறைபாடுகளை கலைவதற்கும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு உதவவும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை உயர் நீதிமன்றம் முதன்மை அமர்வின் எல்லைக்குட்பட்ட அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களின் நிர்வாக இயக்குனர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில், இந்த உத்தரவை அவர்களுக்கு அனுப்பி வைக்கும்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.


மேலும் படிக்க | தற்கொலை செய்த போலீஸ்காரரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசார் பணியிடை நீக்கம்.! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ