தாலியை கழற்றுவது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல்: சென்னை நீதிமன்றம்

தாலிச் சங்கிலியை கழற்றுவது என்பது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல் தான் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 10:25 PM IST
  • விவாகரத்து வழங்கக் கோரியும் கணவர் தாக்கல் செய்த வழக்கு.
  • இணையத்தில் தீர்ப்பு ஒரு புயலை கிளப்பியுள்ளது.
தாலியை கழற்றுவது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல்: சென்னை நீதிமன்றம்  title=

கணவரை பிரிந்து வாழும் மனைவி, தாலிச் சங்கிலியை கழற்றுவது என்பது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல் தான் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர், அரசு ஆசிரியரான தனது மனைவி, தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மனரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்கக் கோரியும் கணவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் சவுந்தர் அமர்வு, பணியிடத்துக்கு சென்று கணவரைப் பற்றி அவதூறு பரப்பியது மனரீதியில் துன்புறுத்துவதற்கு சமம் எனத் தெரிவித்தது. மேலும், வழக்கு விசாரணையின் போது, கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டதாக மனைவி கூறியதும் கூட கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என கூறி, கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் - கர்நாடக முதல்வர் ட்வீட்

தாலி என்பது கணவன் உயிருள்ள வரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில் அவரை பிரிந்ததும், தாலிச் சங்கிலியை கழற்றியது சம்பிரதாயமற்ற செயல் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீர்ப்பு குறித்த செய்தி வந்ததில் இருந்து,  இணையத்தில் இது ஒரு புயலை கிளப்பியுள்ளது, மேலும் திருமணம் செய்து கொண்டதற்கும் நகை அணிவதற்கும் உண்மையான உள்ளார்ந்த தொடர்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டி பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மாட்டின் கழுத்தில் கயிறு கட்டுவதையும் ஒப்பிட்டு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News