தமிழகம் முழுவதும் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை!
தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நிதீமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது!
தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நிதீமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது!
மேலும் பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை கூட்டமாக அழைத்து வருவதற்கும் அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17-வது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் தேதி கடந்த மார்ச் 10-ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இதன் காரணமாக தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் அன்று மாலை 5 மணியளவில் மத்திய- மாநில அமைச்சர்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த அரசு கார்களை திருப்பி ஒப்படைத்தனர். அதே வேலையில் தலைமை செயலகம் உள்ளிட்ட மாநில அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் போட்டோக்களும் உடனடியாக அகற்றப்பட்டன.
ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாச்சியர் அலுவலகங்களில் இருந்தும் இருவரது போட்டோக்களும் அகற்றப்பட்டன.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நிதீமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது.
---மக்களவை தேர்தல் 2019---
17-வது மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி, ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதி, ஆறாம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி, ஏழாம் கட்ட தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகதில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.