யூடிப்பரான மாரிதாஸ் மீது, 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது செல்லாது  எனக்கூறி,  வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  மேலும் இந்த வழக்கு ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு எனவும், அடிப்படை இல்லாமல் காழ்புணர்வில் போடப்பட்டது எனவும் நீதிமதி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் டிவிட்டர் பதிவை வெளியிட்டிருந்தார் என திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன்  மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்திருந்தார்.


அதன் அடிப்படையில் மாரிதாஸ் மீது (124A, 153-A , 504  505 (1) b 505 (2) ஆகிய) ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததை அடுத்து,  மாரிதாஸ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில், மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது எனவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி மாரிதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யபட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன்பாக விசாரணைக்கு வந்தது.


அரசுத்தரப்பில், "முப்படைகளின் தலைமை தளபதி மரணத்தின் அடிப்படையில் தேவையற்ற கருத்தை மாரிதாஸ் முன்வைத்துள்ளார்.  மாநில அரசுக்கு எதிராகவும், அதன் நேர்மையையே கேள்விக்குள்ளாகும் வகையிலும் பதிவு செய்துள்ளார். இளம் உள்ளங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக அவரது பதிவு உள்ளது.


இது தொடர்பாக தேவையற்ற கருத்தை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "சீமான், மாரிதாஸுக்கு ஆதரவாக  
கருத்து தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்" என கருத்து தெரிவித்தார்.


ALSO READ | "மாரிதாஸ் வாழ்க" என நெற்றியில் எழுதிக்கொண்டு வந்த நபர் - காவல்துறை விசாரணை


மனுதாரர் தரப்பில், "மாரிதாஸ் அரசை விமர்சிப்பவர். அவரை அமைதியாக்குவதற்கே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பதியப்பட்ட பிரிவுகள் அடிப்படை ஆதாரமற்றவை என வாதிடப்பட்டுள்ளது.


நீதிபதி, மனுதாரரை  2 லட்சம் பேர் ட்விட்டரில்  பின்தொடர்கிறார்கள்.  மனுதாரர் நன்கு அறிந்தே இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.  அவர் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது செல்லாது  எனக்கூறி, மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


ஆனால் மற்றொரு வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதால்,அவர் சிறையில் இருந்து விடுவிக்கும் வாய்ப்பில்லை. அந்த வழக்கின் மீதான விசாரணை  இன்று 2 நாளில் நடைபெறும்.


ALSO READ | யூடியூபர் மாரிதாஸை டிச.23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR