கர்நாடகாவை தொடர்ந்து தமிழக பள்ளியில் ஹிஜாப் தடை
சங்கர வித்தியலாய பள்ளியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததாக கூறி காவல் நிலையத்தில் முஸ்லிம் அமைப்பினர் புகார்.
தாம்பரம் சங்கர வித்தியலாய பள்ளியில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு பெற்றோர் வர தடை விதித்ததாக கூறி சேலையூர் காவல் நிலையத்தில் முஸ்லிம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். தாம்பரத்தை சேர்ந்த ஆசீக் மீரான் என்பவர் கிழக்கு தாம்பரத்தில் இயங்கிவரும் சங்கர வித்யாலயா பள்ளியில் தனது 4 வயது குழந்தைக்கு LKG வகுப்பு சேர்க்கைக்காக மனைவி, குழந்தையுடன் சென்றிருந்தனர்.
மேலும் படிக்க | புகையிலை விளம்பரம் - மன்னிப்பு கேட்டார் அக்ஷய் குமார்
பள்ளியில் வளாகத்தில் விண்ணப்பம் பெறுவதற்காக அமர்ந்திருந்தபோது, பள்ளியின் அட்மின் மேலாளர் சுந்தரராமன் என்பவர், குழந்தையின் தந்தை அழைத்து, தங்கள் மனைவியை வெளியே சென்று ஹிஜாபை கழறி வைத்துவிட்டு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி முதல்வர் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்தபோது, பள்ளியின் உள்ளே ஹிஜாப் அணிந்து யாரும் வர அனுமதியில்லை என்று முதல்வரும் கூறியதாகவும் கூறப்படுகிறது.
எனவே சம்பந்தபட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசீக் மீரான் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், தமுமுகவினர் என பலரும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். சமீபத்தில் கர்நாடகா சட்டமன்றம் வரை சென்ற ஹிஜாப் விவகாரம் தற்போது தமிழகத்திலும் வந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் ‘ஹிஜாப்’ அணிந்துவர தடை விதித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதனால் அம்மாநில இஸ்லாமிய பள்ளி மாணவிகளிடையே கடும் ஆதங்கமும், அதிருப்தியும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தேர்வை புறக்கணித்தால் மறு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது என்ற அறிவிப்பு அவர்களை மேலும் கவலைக்கு உள்ளாக்கியது.
மேலும் படிக்க | தேர்வு எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR