அடுத்து நான்கு நாட்களுக்கு அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை -முழுவிவரம்
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி சனிக்கிழமை அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வியாழக்கிழமை (அக்டோபர் 14) மற்றும் வெள்ளிக்கிழமை (அக்டோபர்15) ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறை என அறிவித்துள்ளது. தற்போது சனிக்கிழமையும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளதால் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது பண்டிகை காலம் என்பதால் 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இருநாட்கள் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. அதேபோல வார இறுதிநாளான சனிக்கிழமையும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்த பள்ளிக்கல்வித்துறை, அக்டோபர் 16 அன்றும் விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், நாளை முதல் நான்கு நாட்கள் அரசுப்பள்ளிகள் செயல்படாது. மூன்று நாட்கள் அரசு விடுமுறை மற்றும் அக்டோபர் 17 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல பள்ளிகள் இயங்காது.
ALSO READ | 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அக்டோபர் 12 ஆம் தேதி ஆலோசனை
தமிழ்நாட்டில் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், கொரோனா வழிகாட்டுமுறைகளின்படி முதலில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளி திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல், "1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு" மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிக்கு வருவார்கள்.
இந்தாண்டு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பில்லை. டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ALSO READ | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR