கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தில் கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கஜா புயலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர். ஆனால் சில இடங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்ல என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றி, மின்கம்பங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கும் பணியில் அரசும், பொதுமக்களும், தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


இதையடுத்து, கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் நாளை நாகை, புதுக்கோட்டை, கொடைக்காணல், திருவாரூர் ஆகிய மாடவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளது.