தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.10.2017) புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.10.2017) புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 316 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 100 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். 


ஏழை எளிய மக்களுக்கு தங்குதடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக, இந்தியாவிலேயே
முதன் முறையாக தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஜனவரி 2012-ல முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவக்கப்பட்டது. இவ்வாரியம் இதுவரை தேர்வு செய்துள்ள 10,093 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,190 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் உட்பட 22,358 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 


மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 316 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் 100 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.