ஒவ்வொரு பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் #MeToo குறித்த புகார் எப்படி வரும்? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில், `கட்சியின் அவைத் தலைவராக டாக்டர். இளங்கோவன், பொருளாளராக பிரேமலதா, கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக' அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 


இந்த அறிவிப்பை தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து பேட்டியளித்த பிரேமலதா, ``கட்சியின் பொருளாளராக என்னை நியமிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையான உழைப்புக்குக் கட்சியில் மரியாதை உண்டு. விஜயகாந்திடம் இருந்து பாராட்டு பெறுவது எளிதான காரியம் அல்ல" என நெகிழ்ந்தார். 


இதையடுத்து, இன்று காலை தே.மு.தி.க மகளிருடன் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, #MeToo இயக்கத்தை பெண்கள் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்; அதை வைத்து சர்ச்சை செய்யக்கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் #MeToo எப்படி வரும்? என்று தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.