சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M K Stalin) பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. உலகெங்கும் எண்ணற்ற உயிர்களை காவு வாங்கிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும் சமயத்தில் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு (DMK Government) 30 நாட்களை நிறைவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கோவிட் -19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார். மேலும் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அவரது அரசு உறுதி செய்துள்ளது. 


மேலும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நிதிஉதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் (Free bus travel for Women) உள்ளிட்ட தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.


ALSO READ |  திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயணம்: முதல்வர் ஸ்டாலின்


மாநில உரிமைகளைப் (State’s Rights) பாதுகாக்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும், ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் (Former CM M.Karunanidhi) தொடர்ச்சியான முயற்சிகளைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி தமிழுக்கு செம்மொழி (Classical language) அந்தஸ்து வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்த முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழிக்கு மேலும் மேலும் சிறப்பு சேர்க்க தனது கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


நீட் யுஜி 2021 உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யுமாறு சனிக்கிழமை (ஜூன் 5) பிரதமர் நரேந்திர மோடியை அவர் கேட்டுக்கொண்டார்.


நீட் தேர்வு (NEET 2021) பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுட்டுள்ளார்.


ALSO READ |  நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


இந்து கோயில் நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி, கோவில்களின் சொத்துக்கள் அனைத்தையும் வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


தமிழக மக்களின் நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுக்கும் போது, எதிர்க்கட்சி உட்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அவர்களிடம் கருத்து கேட்டு, பின்னர் செயல்படுத்துவது என்பது ஜனநாயகரீதியான நல்ல நடவடிக்கை ஆகும்.


மேலும் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையிலும், நேரடியாக பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்கிறார். இது அவரது அமைச்சரவை மற்றும் எம்.எல்ஏக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.


ALSO READ |  மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR