வெடி வெடிக்கும் பொது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
இந்தியா முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை 18 மற்றும் 19 தேதிகளில் கொண்டாடப்பட உள்ள தீபாவளி அன்று வெடி வெடிக்கும் பொது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்கள் பார்ப்போம்.
# பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல் சிறுவர்களை பட்டாசு, மத்தாப்புக்களை கொளுத்த அனுமதிக்காதீர்கள்.
# பட்டாசுகள், ராக்கெட்டுகள், பூச்சட்டிகள் (புஸ்வானம்) ஆடம்பாம் போன்றவைகளை கைகளில் வைத்து வெடிக்காதீர்கள்.
# எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ போட வேண்டும்.
# பட்டாசு மற்றும் வெடிகளை வெடிக்க தீக்குச்சிகளை பயன்படுத்தாதீர்கள்.
# ஒருபோதும் வெடிக்காத பட்டாசு மற்றும் மத்தாப்புகளை மீண்டும் வெடிக்காதீர்கள்.
# வீட்டிற்கு அல்லது கட்டிடங்களுக்கு மிக அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
# தீக்காயத்தில் ஒட்டியுள்ள ஆடையினை அகற்றாதீர்கள்.
# நீண்ட ஊதுவர்த்திகளை கொண்டு பட்டாசுகளை வெடியுங்கள்.
# தீக்காயத்தின் மீது எண்ணெய் மற்றும் இங்க் போன்றவற்றினை கொட்டவேண்டாம்.
# பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு அருகிலோ, முன்னரோ பட்டாசு வெடிக்கக்கூடாது.
# பெட்ரோல் பங்குகளுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
# மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்.
# பட்டாசுகளை கூட்டம் நிறைந்த தெருக்கள் மற்றும் சாலைகளில் வெடிக்காதீர்கள்.
# பட்டாசுகளை முறையாக தீ உரிமம் பெற்ற கடைகளிலேயே வாங்க வேண்டும்.
# திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும்.
# பட்டாசு வெடிக்கும்பொழுது இறுக்கமான பருத்தி ஆடை உடுத்த வேண்டாம்.
# பாதுகாப்பிற்காக காலணி அணிந்து வெடி கொளுத்துங்கள்.