அடுத்த 48 மணிநேரமும் மழை தான்... தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - முழு விவரம்
Weather Latest News: தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Tamil Nadu Weather Latest News: தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
பிரதீப் ஜான் எச்சரிக்கை
அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகியவற்றின் (South Districts Rain) ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு நேற்றும் (டிச. 16), இன்றும் (டிச. 17) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் (Tamil Nadu Weatherman Pradeep John) அவரது X பக்கத்தில்,"கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் தமிழகத்தில் சம்பவம் தொடங்கியது. அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை கவனிக்க வேண்டும். மணிமுத்தாறு & பாபநாசம் அணை இரண்டுமே உபரியாக இருக்கும். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஞ்சோலை மலைகள் அத்தகைய காற்று அடிக்கும் அரக்கர்கள். கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தின் மறுபகுதியிலும் கனமழை பெய்யும். தாமிரபரணி, குழித்துறையில் வசிக்கும் மக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ரேசன் கடையில் இன்று முதல் ரூ. 6 ஆயிரம்... வாங்க எந்த நேரத்தில் போகலாம்?
அடுத்தடுத்த நாள்களில் மழை நிலவரம்
தமிழகத்தின் பிற பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை (டிச. 18) பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை நாளை மறுதினம் (டிச. 19) பெய்யக்கூடும். மேலும், டிச. 20ஆம் தேதி முதல் டிச.22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Chennai Rains: சென்னை நிலவரம் என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது: முதலமைச்சர் ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ