சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் நிர்வாகிகளை சந்தித்த பின் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொங்கல் தொகுப்பில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டை முன் வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 ஒரு பொருள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு நியாய விலை கடை மூலமாக வழங்கினார்கள். ஆனால், அரசு அறிவித்தவாறு இருபத்தி ஒரு பொருட்களும் வழங்கப்படவில்லை வழங்கப்பட்ட பொருட்களும் தரமானதாக இல்லை கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களின் எடை குறைவாகவே உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். 


ALSO READ | தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ₹1000 கோடி ஊழல்: H. ராஜா


செய்தியாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி  கூறியதாவது:


  • பொங்கல் தொகுப்பில் 1300 கோடி கொள்முதல் செய்து 500 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனர்.  

  • கரும்பு கொள்முதல் தமிழக அரசு அறிவித்துள்ள 33 ரூபாய் அறிவித்திருந்த நிலையில் கரும்புக்கு 16 ரூபாய் மட்டுமே வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

  • நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது


ALSO READ | அரசு அதிகாரிகளின் அராஜகம்; பழங்குடியின குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடும் அவலம்!


  • தொற்று குறித்து சரியான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்த்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

  • சேலத்தில் நேற்றைய தினம் 785 பேருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த திமுக அரசு சரியாக நிர்வாக திறன் இல்லாத அரசாக செயல்படுகிறது.

  • இதையெல்லாம் மறைப்பதற்கு இன்றைய தினம் தர்மபுரியில் உள்ள முன்னாள் அமைச்சர் சகோதரர் கேபி அன்பழகன் அவர் வீட்டில் மற்றும் உறவினர் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள் மக்களை திசை திருப்பவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது.

  • தமிழ்நாடு முழுவதும் தைப்பொங்கல் பரிசுப்பொருட்களை முறைகேடு நடந்திருப்பதை மக்கள் கொந்தளித்துள்ளார்.

  • அதிமுகவை பழி வாங்க வேண்டுமென்றே திட்டமிட்டு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போடப்படுகிறது.

  • வேண்டும் என்றே திட்டமிட்டு முன்னாள் அமைச்சர்கள் குறித்த அவதூறு செய்தியை பரப்பி, லஞ்ச ஒழிப்பு, காவல்துறைகளை பயன்படுத்தி ரெய்டு நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.


ALSO READ | முதலமைச்சரை ஒருமையில் பதிவிட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR