விஷத்தை திணிக்கும் மார்க் ஆண்டனி... படத்திற்கு தடை கோரும் திருநங்கை - முழு விவரம்!
Criticism On Mark Antony Movie: மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் என திருநங்கை ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அப்படத்திற்கு கண்டனமும் தெரிவிக்கின்றனர்.
Criticism On Mark Antony Movie: மார்க் ஆண்டனி படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இருப்பினும் அந்த படத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள LGBTQ சமூகத்தினருக்கு எதிரான கருத்துகளுக்கு இயக்குநர் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
'திருந்துங்க டா டேய்...'
சமூக வலைதளங்களிலும் பல்வேறு கண்டன பதிவுகளை பார்க்க முடிகிறது. அதில் ராகுல் சுரேஷ்குமார் என்ற பேஸ்புக் பயனர் எழுதிய பதிவில்,"நான் மார்க் ஆண்டனியைப் பார்த்து மகிழ்ந்த போதும், இந்தப் படம் திருநங்களைகள், LGBTQ சமூகத்தினருக்கு எதிரான மற்றும் பெண் விரோத உள்ளடக்கத்தால் ஆழமான சிக்கலைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் புறக்கணிக்க முடியாது. இது 2023, இன்னும் எஸ்.ஜே. சூர்யா போன்ற ஒரு நட்சத்திரம் கேவலமான வகையில் "அவனா நீ ?" என தன்பாலின ஈர்ப்பாளராக கொடூரமான வகையில் காட்சிப்படுத்தப்பட்ட ஒய்.ஜி. மகேந்திரன் நடித்த கதாபாத்திரத்துடன் உரையாடுகிறார்.