சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை... மற்ற மாவட்டங்களுக்கு?
Chennai Floods: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 7) விடுமுறை வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Chennai School Colleges Leave: மிக்ஜாக் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ள நிலையில் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட நகரை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து தொடர்ந்து உபரி நீரி திறந்துவிடப்பட்டு வருகிறது.
மழை நின்று இரண்டு நாள்களாகியும் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வெளியேறவில்லை. இதன் காரணமாக, மின்சார இணைப்பும் இன்னும் முழுமையாக சீராகவில்லை. பல இடங்களில் இணைய வசதியும் கிடைக்காத நிலையில் பல பகுதிகளில் மக்கள் பிறருடன் தொடர்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், பால் போன்றவற்றை பெறவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் சூளைமேடு, அரும்பாக்கம், அசோக் நகர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படகு மூலமும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | தாம்பரம் - முடிச்சூர் கழுகுப்பார்வை! டிரோன் வீடியோ!
மேலும் பல இடங்களில் அரசு தரப்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் அங்கே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கேயே அனைத்து அடிப்படை வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும கல்லூரிகளில் பாதிக்கப்பட்டோருக்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மழை வெள்ளதால் பல மாணவர்களும் தங்களின் பாடப்புத்தகங்கள், சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்திற்கு மட்டும் நாளை (டிச. 7) ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படுவது குறித்து அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் முடிவெடுப்பார் என தெரிகிறது. மழை பாதிப்புகளை முன்னிட்டு கடந்த 4, 5ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை வழங்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் அப்போது விடுமுறை வழங்கப்பட்டது. 4ஆம் தேதி விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. தொடர்ந்து, மழை குறைந்த நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டது. தற்போது, அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் தொடங்க இருந்த நிலையில், தேர்வு தள்ளிவைக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும் படிக்க | கடல்போல காட்சியளிக்கும் வேளச்சேரியின் அவல நிலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ