மதுரை: 2019 மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார் என்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் கூறியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், எஎன் கனவிலும் நான் எதிர்பாராத உயரங்களை தந்த இந்த இயக்கத்தை விட்டு நான் பா.ஜ.க.வுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளி அவதூறாக பரப்பப்படுகின்றன. என் குடும்பம் மட்டுமல்ல என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கு இந்த இயக்கத்திற்கு நன்றிக்கடன் செலுத்தினாலும் அது போதாது போதாது என்பதை என் உதிரத்தில் கலந்த உறுதியை கொண்டவன் நான். என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க.வின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாற மாட்டான். வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கையில் கூறியிருந்தார்.


ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையைக் குறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் பாஜகவில் சேரவில்லை என்றால், இல்லை என்று சொல்ல வேண்டியது தானே.. அதற்கு ஏன் நான்கு பக்கங்கள் கொண்ட நீண்ட அறிக்கையை வெளியிடுகிறார்? அவருக்கு பயம் ஏற்ப்பட்டு விட்டது. மடியில் கனமிருந்தால்தானே பயம் வரும்? ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேருவது நூறு சதவீதம் உறுதி. ஓ.பன்னீர்செல்வம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கக் கூடியவர் எனத் அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் கூறினார்.