தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி மறுத்ததால் பல்வேறு நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் தவிப்பு.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலேசியா, சிங்கப்பூர், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா ஊரடங்கால் தமிழகம் திரும்ப முடியாமல் இலட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.


வெளிநாடுகளில் இருந்து விமானங்களை கையாள கடந்த 26.5.2020 அன்று இந்திய அரசால் நிலையான இயக்க முறைமை (Standard Operating Procedure) வெளியிடப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த மீட்பு விமானங்கள் மற்ற மாநிலங்களில் தரையிறங்கிய நிலையில், தமிழகத்தில் தரையிறங்க தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.


எனவே, தமிழகத்தைச் சேர்ந்த அனைவரையும் தாயகம் அழைத்து வருவதற்கு ஏதுவாக, “தமிழகத்திற்கு விமான சேவை வேண்டாம்” என்று அ.தி.மு.க. அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்திட வேண்டும் என்று கோரியிருந்தார்.


இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்த போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு. பி.வில்சன் எம்.பி., அவர்கள் கீழ்க்கண்ட வாதங்களை எடுத்து வைத்து வாதாடினார்:


1. வெளியுறவுத்துறை, பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை, விமான நிலையம் ஆகியவை பட்டியல் 1-ன் படி மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவை மற்றும் அவர்களுக்கு மட்டுமே விமானங்கள் தரையிறங்கும் விவகாரத்தை கையாள அதிகாரம் உண்டு. தமிழ்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதை தடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.


2. 2.10.06.2020 முதல் 01.07.2020 வரை மத்திய அரசால் இயக்கப்படும் 356 ஏர் இந்தியா மீட்பு விமானங்களில், 16.06.2020 அன்று மணிலாவில் இருந்து வரும் ஒரு விமானம், 17.06.2020 அன்று பாங்காக்கில் இருந்து வரும் மற்றொரு விமானம் ஆகிய இரண்டு விமானங்கள் மட்டுமே சென்னையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


3. அதே தேதிகளில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 203 மீட்பு விமானங்கள் இயக்கப்படும் நிலையில், மணிலாவுக்கும், பாங்காக்கிற்கும் தலா ஒவ்வொன்று வீதம் இரண்டு விமானங்கள் மட்டுமே சென்னையில் இருந்து புறப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


4. தமிழ்நாட்டில் விமானம் தரையிறங்க மாநில அரசு அனுமதி மறுப்பதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரவித்துள்ளது.


5. நியூசிலாந்தில் 130 பேர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.


6. தமிழ்நாட்டில் மீட்பு விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதிக்காததால், சிங்கப்பூரில் சிக்கியுள்ள 50,000 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள 1 லட்சம் பேர், மலேசியா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் சிக்கியுள்ள மேலும் ஆயிரக் கணக்கானோரை, தமிழ்நாட்டில் விமானம் தரையிறங்க மாநில அரசு அனுமதிக்காததால் மீட்டுவர முடியவில்லை.


7. வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களில் சில கர்ப்பிணிப் பெண்களும் உள்ளனர். இவர்கள், செலவுக்கு பணம், உணவு, மருந்து மற்றும் உறைவிடம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் மீட்பு விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.


மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால், மீட்பு விமானங்களை வழங்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்தார். அவரது கருத்தைக் கேட்ட நீதிபதிகள். விமானங்கள் தரையிறங்குவதைத் தடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும், மத்திய அரசுக்கு மட்டுமே அதற்கான அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தனர்.


வெளிநாட்டு விமானங்களை கையாளுவதற்கான நிலையான இயக்க முறைமை (Standard Operating Procedure) ஏற்கனவே மத்திய அரசால் வரையறுக்கப்பட்டுவிட்டதால் அதனை மாநில அரசு பின்பற்ற வேண்டும். எனவே கீழ்காணும் அம்சங்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


1. இதுவரையில் குடிமக்களை மீட்க எத்தனை விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் இதுவரை எத்தனை குடிமக்கள் தமிழகத்துக்கு மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளனர்?


2. அனைத்து நாடுகளிலும் மொத்தமாக எத்தனை இந்தியர்கள் தமிழகம் திரும்ப பதிவு செய்துள்ளனர்?


3. இந்த இந்தியர்களை தமிழக அழைத்து வருவதற்கான செயல்திட்டம் என்ன?


4. இந்தியர்களை மீட்க மேலும் அதிகமான விமானங்களை இயக்க முடியுமா?


5. இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும், சிக்கித் தவிப்பவர்களின் பட்டியலைத் தாருங்கள்.


6. இந்தியா மற்றும் தமிழகத்துக்கு மக்களை அழைத்துவரப் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை.


7. மீதமுள்ள சிக்கித் தவிப்பவர்களை அழைத்து வருவதற்கான இந்திய அரசின் திட்டம்.


8. பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகளின் விவரம்


9. இதுபோன்ற விமானங்களை இயக்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.


10. விமான நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட கோரிக்கைகள், அந்தக் கோரிக்கைகள் மீதான மாநில அரசின் முடிவுகள்.


மற்ற விவரங்கங்கள் மற்றும் அடுத்த உத்தரவுகளுக்காக இவ்வழக்கு 19.6.2020-க்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.