சேலம் மாவட்டத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை துவக்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 30 ஆயிரம் மேற்பட்டோருக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினார்.  தொடர்ந்து அவர் பேசும்போது திமுக தலைமையிலான தமிழக அரசு என்றைக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய அரசாக இருக்கும் என்றும் வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் பாகுபாடு இன்றி நிறைவேற்றப்படும் என்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | IAS அதிகாரிகளின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு!


தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பதற்கினங்க இன்னைக்கு மட்டும் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.  அரசு துறைகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது, 168 கோடிக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  மனிதனுடைய வாழ்க்கை தான் மேம்பாடு.  ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிதான் சமூகத்தினுடைய வளர்ச்சி, அந்த வகையில் எங்களுடைய கடமையாக மாவட்டங்களுக்கு நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.  அதுபோல ஒட்டுமொத்தமா இந்த மாவட்டத்தை வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை தீட்டி இருக்கிறோம், இன்றைக்கு மட்டும் 261 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



திமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சிக்கு மேலும் பல  பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், அதனைக் பட்டியலிட்டார்.  அதன்படி சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் 550 கோடி ரூபாய் செலவில் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.  சேலத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி மூக்கனேரி அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்துவதற்காக 60 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.  சேலம் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.   சேலம் விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.  சேலம் மாநகராட்சி பகுதியில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க கருப்புரில் உற்பத்தி மையம் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.  இந்த மாவட்ட அந்த மாவட்டம் என்ற பாகுபாடே கிடையாது தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலும் மக்களுக்கு ஏற்புடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


சில நாட்களுக்கு முன்னால் வறுமை குறைவான மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் வகிப்பதாக ஒரு புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. இந்த இடத்திற்கு தந்தை பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் காட்டிய வழிதான் என்பதை மறுக்க முடியாது என்றும் இந்த புள்ளிவிவரம் மகிழ்ச்சி அளித்தாலும் தனக்கு அது ஏற்புடையதாக இல்லை என்றும், தமிழ்நாட்டில் பசி என்பது இல்லை என்ற நிலையை உருவாக்கவும் வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முதலாவதாக இருக்கும் இந்த அடிப்படையில்  இந்த அரசு முழு மகிழ்ச்சியோடு களத்தில் இறங்கியிருக்கிறது.  தலைவர் கலைஞர்  பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள் ஸ்டாலின் என்றால் உழைப்பு.  உழைப்பு என்று அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு நான் எந்த ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருக்கேன்.  ஆட்சிக்கு  வந்தவுடன் கொரானாவை வென்றோம், தொடர்ந்து தண்ணீர் தேக்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.  அதனையும் வெற்றிகரமாக செய்து முடித்தோம் நேற்று கோவை இன்று சேலம் நாளை சென்னை உழைப்பு உழைப்பு உழைப்பு உங்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று கூறினார்.


ALSO READ | அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR