ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூமாண்டகவுண்டனூரை சேர்ந்த விவசாயியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி(28) பி.இ படித்து விட்டு பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் பூரணி கல்லூரியில் படித்து போது சின்னியம்பாளையத்தை  சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் மதன்குமார்(29) என்பவரை காதலித்து வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அந்தஸ்த்து காரணமாக இவர்களது  காதலை பூரணியின் பெற்றோர் ஏற்க மறுத்தனர் அதைத்தொடர்ந்து பூரணி  கடந்த ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன் மதன்குமாரை  திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து காதல் திருமண தம்பதியர் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்பட்டது.


மேலும் படிக்க | கணவனின் செல்போனை பார்த்த மனைவி! பறிபோன வாழ்க்கை! என்ன நடந்தது?


இந்நிலையில் பூரணி  கருவுற்றதும் கடந்த சில மாதங்களாக கணவன் வீட்டில் இருந்து வந்தார் பூரணிக்கு கடந்த 5மாதங்களுக்கு முன் கோபிசெட்டிபாளையம் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது குழந்தை பிறந்தது முதல் சின்னியம்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்த பூரணி கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது திடீரென மயங்கி விழுந்ததாகவும் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் மதன்குமார் வந்து பார்த்த போது, பூரணி மயங்கி கிடப்பது கண்டு முதலுதவி செய்ததாகவும் பின்னர் கவுந்தப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பூரணியை சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. 



பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அதைத்தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனைக்கு பூரணியை  கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பூரணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர் இதனைத்தொடர்ந்து  பூரணியின் சடலத்தை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சட்டம் சார்ந்த மருத்துவ குழுவினர் மூலமாக பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.


திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் மரணமடைந்த நிலையில் கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்சினி மற்றும் கோபி டி.எஸ்.பி தங்கவேல் ஆகியோரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பூரணியின் பிரேத பரிசோதனை அறிக்கை காவல்துறையினருக்கு கிடைத்தது. அதில் பூரணி தாய்ப்பால் கொடுத்த போது மாராடைப்பால் இறக்கவில்லை என்பதும், கழுத்து நெறிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பூரணியின் மரணம் இயற்கை மரணம் என்று கூறப்பட்ட நிலையில் காதல் கணவனே, கழுத்தை நெறித்து கொலை செய்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றபபட்டு கணவன் மதன்குமார், மாமியார் பூங்கொடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் சென்ற போது, குடும்பத்துடன் மதன்குமார் மாயமாகி இருப்பது தெரிய வந்தது காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து விட்டு மருத்துவமனையில் அழுது நாடகமாடிய கணவன் மதன்குமார்  மற்றும் அவரது தாயார் பூங்கொடி, தந்தை யுவராஜ் ஆகியோரைக் கைது செய்ய  காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து மாயமான மதன்குமாரையும் அவரது பெற்றோர்களை பிடிக்க  இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை காவல்துறையினர் கடந்த ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த மதன்குமார் மற்றும் அவரது தந்தை யுவராஜ்,தாய்பூங்கொடியை ஒத்தகுதிரை என்ற இடத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர்


காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் பழகி வந்த நிலையில் படிப்பை முடித்த பிறகு வேலைக்கு சென்ற போது பூரணியை மதன்குமார் திருமணம் செய்து உள்ளார். திருமணத்தில் விருப்பம் இல்லாத பூரணியின் பெற்றோர் பூரணியிடம் பேசுவதை தவிர்த்து உள்ளனர் திருமணம் முடிந்த பிறகு பூரணி அவரது பெற்றோரிடம் சொத்தில் பங்கு எதுவும் வேண்டும் எனக்கூறி உள்ளார். 


இதன் பிறகு பூரணிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்து மகளையும், பேத்தியையும் பார்க்க சென்ற போது சொத்து கிடைக்காத நிலையில் கடும் கோபத்தில் இருந்த கணவன் மதன்குமாரும் அவரது குடும்பத்தினரும் பூரணியின் பெற்றோர்களை தடுத்து நிறுத்தி சண்டையிட்டு திருப்பி அனுப்பியதாக தெரியவந்துள்ளது பலமுறை சொத்தை பிரித்து வாங்கி வருமாறு மனைவி பூரணியிடம் மதன்குமாரும் அவரது குடும்பத்தினரும் கூறிய போது அதை பூரணி ஏற்க மறுத்து உள்ளார்.   


பூரணியின் பெற்றோரிடம் இருந்து சொத்து எதுவும் கிடைக்காது என முடிவு செய்த, மதன்குமார், சம்பவத்தன்று பூரணியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக நடகமாடியது தெரிய வந்தது மதன்குமார் செய்த கொலைக்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மதன்குமார் மற்றும் அவரது பெற்றோர் கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காதல் கணவனே சொத்திற்க்காக காதல் மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க |  ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம் பெண் இறப்பு - கணவர் குடும்பத்தார் மீது சந்தேகம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ