இன்ஸ்டாகிராமில் பழகிய கள்ளக்காதலனை பார்க்க சென்ற மனைவியை அவரது காதல் கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவரது கணவர் ராகேஷ். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.


இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்வேதா இன்ஸ்டாகிராம் மூலம் சத்திய கண்ணன் என்பவருடன் பேசி பழகி வந்துள்ளார். 


மனைவியின் நடவடிக்கைகள் மீது கணவர் ராகேஷுக்கு சந்தேகம் வந்தது. இதன் காரணமாக அவர் தனது மனைவியை தொடர்ந்து கண்காணிக்கத் துவங்கினார். இதில், ஸ்வேதாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.


மேலும் படிக்க | நம்பி வந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்: தஞ்சை அருகே கொடூரம் 


ஸ்வேதாவின் கணவர் ராகேஷ் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, ஸ்வேதாவும் சத்திய கண்ணனும் சந்தித்து பேசிக்கொண்டிருந்ததை தெரிந்து கொண்டார். பின்னர், அங்கு வந்து ராகேஷ் இருவரையும் சிறிது நேரம் கண்காணித்திருக்கிறார்.


பின்பு ஸ்வேதாவின் கணவர் ராகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்



இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியையும் கள்ளக் காதலனையும் கணவர் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | Viral News: தமிழ் குடும்பத்திற்கு மருமகளான ஆப்பிரிக்க பெண் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR