நான் திமுக உறுப்பினர் தான்- எம்.பி. ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் பதில்
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரிவேந்தர், மதிமுக-வை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோர் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரிவேந்தர், மதிமுக-வை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோர் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
மாற்று கட்சியினர் திமுக சின்னத்தில் போட்டியிடுவது சட்டத்திற்கு புறம்பானது, அவர்களின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளருமான ரவிக்குமார் தான் திமுக உறுப்பினர்தான் என பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். 2019ஆம் ஆண்டு தேர்தலின் வேட்புமனு தாக்கலின்போதும் தாம் திமுக உறுப்பினராகத்தான் இருந்ததாகவும் இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ரவிக்குமார் பதில் அளித்திருக்கிறார். இதற்கு முன் மதிமுக-வை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியும் தான் திமுக உறுப்பினர் என பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஐ சமத்துவ நாளாக அறிவிக்க வேண்டும் என்று ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ALSO READ விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR