கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்வதாகவும், மக்கள் பிரச்னை முக்கியம் என்பதால் 39 கோரிக்கை தொடர்பாக பேச இருபதாகவும் அவர் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை 6 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயண சாமி, ஆளுநர் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை முன் கடந்த 13 ஆம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் நாராயணசாமி விதித்த நிபந்தனைகளை ஆளுநர் கிரண்பேடி ஏற்காததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில் சாலையிலேயே படுத்து உறங்கி தொடர்ந்து இன்று 6-வது நாளாக முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுள்ளனர்.


இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். மாலை 5 மணிக்கு அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை இரவு விருந்தில் பங்கேற்கவும் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாராயாணசாமியைச் சந்தித்து ஆதரவை தெரிவிக்கச் செல்வதாகத் தெரிவித்தார்.