சென்னை: நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று முடிந்தது. அதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு தொடர்ந்து மாலை 6 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் வாக்குபதிவு 8 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடிகர் ரஜினிகாந்த், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கபட்டிருந்த வாக்குசாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இதனையடுத்து நேற்று சமூக வலைதளங்களில் "அடுத்த ஓட்டு ரஜினிக்கே" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் மிகவும் பிரபலமானது. 


இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் சில கேள்விகள் எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியது, 


> வரும் காலங்களில் வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதனால் வாக்குபதிவு சதவீதம் அதிகரிக்க முடியும்.


> கட்சி குறித்த கேள்விக்கு.... கட்சி ஆரம்பிப்பது குறித்து முடிவு மே 23 ஆம் தேதிக்கு பிறகு பார்க்கலாம். அதன் அதன் பிறகு முடிவு செய்யலாம்.


> பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவாரா? என்பது மே 23க்கு பிறகு தெரிந்துவிடும்.


> அரியலூரில் வன்முறை குறித்து கேட்டதற்கு, முன்பு நடந்ததை விட குறைவாக தான் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டு உள்ளது. அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.


> தேர்தலில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது என்ற கேள்விக்கு, அதுக்குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யவேண்டும். நான் கருத்து கூற முடியாது.


> 18 சட்டமன்ற தேர்தல் முடிவு வந்த பிறகு, உங்கள் கட்சி அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்விக்கு, முதலில் முடிவுகள் வெளியாகட்டும். பின்னர் முடிவு செய்யப்படும். சட்டமன்ற தேர்தல் எப்ப வந்தாலும், அதை எதிர்க்கொள்ள ரெடியாக இருக்கிறோம்.


> "அடுத்த ஓட்டு ரஜினிக்கே" என்ற ஹேஷ்டேக் குறித்த கேள்விக்கு, ரசிகர்களின் ஆர்வம் நன்றாக புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன். கண்டிப்பாக வருவேன் எனக் கூறினார்.