MGR பலரின் இதயங்களில் வாழ்கிறார், அவருக்கு முன் நான் தலை வணங்குகிறேன்: PM Modi Tweet
பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் பலரின் இதயங்களில் வாழ்கிறார். திரைப்படங்களாக இருந்தாலும் சரி, அல்லது, அரசியலாக இருந்தாலும் சரி, அவர் பரவலாக மதிக்கப்படுகிறார் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
உலகில் பல தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பல தலைவர்கள் மக்களின் நல்வாழ்விற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார்கள். ஆனால் ஒரு சிலராலேயே மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அப்படிப்பட்ட தலைவர்களில் கண்டிப்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயர் முன்னிலையில் இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.
எம்.ஜி.ஆர் (MGR) அவர்களின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
"பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் பலரின் இதயங்களில் வாழ்கிறார். திரைப்படங்களாக இருந்தாலும் சரி, அல்லது, அரசியலின் உலகமாக இருந்தாலும் சரி, அவர் பரவலாக மதிக்கப்படுகிறார்" என்று பிரதமர் மோடி (PM Modi) ட்வீட் செய்துள்ளார்.
"தனது முதல்வர் பதவிக்காலத்தில், வறுமை ஒழிப்புக்கு அவர் பல முயற்சிகளைத் தொடங்கினார். மேலும் பெண்கள் அதிகாரம் குறித்தும் வலியுறுத்தினார். அவரது பிறந்தநாளன்று நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பிரதமர் கூறினார்.
ALSO READ: திருவள்ளுவர் தினம்: அனைத்து இளைஞர்களும் திருக்குறளை படிக்க வேண்டும்: PM Modi ட்வீட்
குஜராத்தில் (Gujarat) உள்ள ஒருமைப்பாட்டு சிலையை பல இடங்களுடன் வசதியாக இணைக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எட்டு ரயில்களை கெவாடியாவுக்கு கொடியசைத்து துவக்கும் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, கெவாடியாவுக்கு இன்று கொடியசைத்து துவக்கப்பட்ட ரயில்களில் ஒன்று சென்னையின் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் செண்டிரல் ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது என்று கூறினார்.
"இன்று பாரத ரத்னா (Bharat Ratna) எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பது ஒரு இனிமையான தற்செயலான நிகழ்வாகும். அவரது வாழ்க்கை ஏழைகளின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.
"நாம் அனைவரும் அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்காக செயல்படுகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"நான் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர்-ஐ வணங்குகிறேன்” என்று பிரதமர் மோடி எம்ஜிஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
எம்.ஜி.ஆர் என பிரபலமாக அறியப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் 1917 இல் பிறந்தார். அஇஅதிமுக-வை (AIADMK) தோற்ருவித்த எம்ஜிஆர், 1977 மற்றும் 1987 க்கு இடையில் பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராக பதவி வகித்தார். எம்.ஜி.ஆருக்கு அவரது மரணத்திற்குப் பிறகு 1988 இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
ALSO READ: G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ள பிரிட்டன்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR