தனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்குவதில் மகிழ்ச்சியில்லை என்றும், எனவே தனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், செயல்வீரர்கள் வீராங்கனைகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


இந்நிலையில், எனது பெயரில் நற்பணி மன்றங்களை அமைத்து எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், அதிமுகவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும், மன்றங்களும் மட்டும்தான் செயல்பட வேண்டும் என்று  பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.