சென்னை: போயஸ் கார்டனில் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் அதிமுக பொது செயலாளர் சசிகலா பேசியதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நன்றி இல்லாமல் அதிமுக-வை பிரித்து ஆள நினைக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். அதிமுக-வுக்கு விசுவாதமாக இல்லை என்பதை பன்னீர்செல்வம் காட்டி உள்ளார். பன்னீர்செல்வத்தால் 1.5 கோடி தொண்டர்களை ஒன்றும் செய்ய முடியாது. அம்மாவின் உடல் அருகே இருந்தேன். நான் இருந்த துக்கத்தில் எனக்கு முதல்வர் பதவி பெரிதாக தெரியவில்லை.


ஜெயலலிதா மறைந்த போது எனக்கு பதவி ஆசை இல்லை என்று கூறினேன். ஓ. பன்னீர்செல்வம் உள்பட 5 அமைச்சர்களை பதவி ஏற்க கூறினேன் நான். ஆனால் பன்னீர்செல்வம் உள்பட 5 பேரும் சேர்ந்து உங்களை தான் முதல்வராக ஏற்று கொள்வார்கள் என கூறினார்கள். ஆனால்  நீங்கள் முதலில் பதவி ஏற்று கொள்ளுங்கள் எனக்கூறி பதவி ஏற்க வைத்தேன். முதல்வர் பதவிக்கு நான் எபோதும் ஆசைப்படவில்லை.


போட்டி போடும் பன்னீர் செல்வத்திற்கு பதவியும்,பரிசும் யாரால் வந்தது? ஒரு சாதாரண மனிதரை அம்மாதான் பெரிய பதவிகளில் அமர வைத்தார். ஆனால் அவர் தற்போது கட்சியை பிரிக்க பார்க்கும் போதும்,அவர் கழகத்திற்கு உண்மையாக இல்லை என்பதை காட்டிவிட்டார்.


எம்.ஜிஆரின் பணி தொடர வேண்டும் என எண்ணினேன். ஜெயலலிதா பதவி வேண்டாம் என்ற போது நான் ஆதாரவாக பேசினேன். எம்.ஜிஆர் இறந்த போது ஜெயலலிதாவை அவமதித்தனர். எம்.ஜிஆரின் மறைவின் போது ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தேன். ஜெயல்லிதா மறைந்த போது நான் நினைத்து இருந்தால் முதல்வராகி இருக்க முடியும் ஆனால் அந்த எண்ணம் எனக்கு துளியும் இல்லை. 


திமுகவோடு நெருங்கியதால் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். சட்டபேரவையில் திமுக ஆதரவை பன்னீர்செல்வம் மறுக்கவில்லை. திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அவரை தொடர்ந்து முதலவராக அனுமதித்து இருப்பேன். இந்த அரசு தொடர வேண்டும் அதற்காக எனது உயிரையும் கொடுப்பேன். அதிமுக தான் தொடர்ந்து ஆட்சி அமைக்கும். 33 ஆண்டு காலமாக ஜெயலலிதாவுடன் இருந்தவள் எனக்கு பயம் கிடையாது.


நான் பன்னீர்செல்வம் போன்று 1000 பேரை பார்த்திருக்கிறேன். எப்படி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த கட்சியை யாராலும் பிரிக்க முடியாது. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்த முடியாது.


இவ்வாறு அவர் கூறினார்.