தன்னைக் கடவுள் என்று எப்போதும் கூறிக் கொண்டதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மக்களவைத் தொகுதியின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, சத்துவாச்சாரியில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தொகுதிக்குட்பட்ட மக்கள், ஏ.சி.சண்முகத்தின் மருத்துவமனையில் இலவசமாக கிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், 600 ஏழை மாணவர்கள் அவரது கல்லூரியில் இலவச கல்வி பயிலலாம் என்றும் அறிவித்தார்.


தன்னைக் கடவுள் என்று ஒரு போதும் கூறிக் கொண்டதில்லை என மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். கோடநாடு கொலை, கொள்ளையை கண்டுபிடித்தது அதிமுக அரசு தான் எனக் கூறிய அவர், பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக மீது குறை கூற முடியாது எனக் கூறினார்.


இதைத் தொடர்ந்து ஆற்காடு மற்றும் முத்துக்கடை பேருந்து நிலையத்தில், பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக விடமாட்டேன் எனக் கூறியவரை திமுக கூட்டணியில் வைத்திருப்பதாக சாடினார்.


கொள்கை வேறு, கூட்டணி வேறு எனத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவை மதவாத கட்சி எனக் கூறும் திமுகவுக்கு, 1999 ஆம் ஆண்டு அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது தெரியவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.