சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் என நடிகர் சூர்யா ட்வீட்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளதாகவும், இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமையை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறை தான், என்று நடிகர் சூர்யா (Actor Surya) தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 


நீட் தேர்வுக்கு (NEET Exam) எதிராக நடிகர் சூர்யா கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்து தமிழகம் முழுக்க பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் தனது அறிக்கையில், ஒரே சமயம் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற அவலம் எதுவும் இல்லை. ஒரு தேர்வெழுதப் செல்ல மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் நிலைக்கு நாம் சென்று இருக்கிறோம்.


தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. அதன்பின் இதை கடந்து விடுகிறோம். உயிரிழந்த மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அதை அனல் பறக்க விவாதிப்பார்கள்.


உயிருக்குப் பயந்து காணொளியில் வழக்குகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய்த் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்" என அந்த அறிக்கையில் சூர்யா குறிப்பிட்டிருந்தார்.


ALSO READ | மாதவனும், அனுஷ்கா ஷெட்டியும் நடித்த 'நிசப்தம்' Amazon Prime Videoவில்...


இவரது கருத்து சரிசையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இனி நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் நடிகர் சூர்யா பேசக்கூடாது. குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் குறித்து விமர்சிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அவரின் சமூக சேவைகளை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்று சென்னை ஹைகோர்ட் நேற்று உத்தரவிட்டது.


இந்நிலையில், நடிகர் சூர்யா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. இந்திய நீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறை தான். சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.