மாதவனும், அனுஷ்கா ஷெட்டியும் நடித்த 'நிசப்தம்' Amazon Prime Videoவில்...

மாதவன் மற்றும் அனுஷ்கா நடித்த 'நிசப்தம்' இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது... தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழிகளில் வெளியாகிறது நிசப்தம்... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2020, 09:08 PM IST
மாதவனும், அனுஷ்கா ஷெட்டியும் நடித்த 'நிசப்தம்' Amazon Prime Videoவில்... title=

புதுடெல்லி: மாதவன் மற்றும் அனுஷ்கா நடித்த 'நிசப்தம்' இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது... தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழிகளில் வெளியாகிறது நிசப்தம்... 

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிய Nishabdham/ Silence திரைப்படத்தை  தயாரிப்பவர் டி.ஜி. விஷ்வா பிரசாத். இதில் அனுஷ்கா ஷெட்டி, மாதவன், அஞ்சலி மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

'Nishabadham/Silence' திரைப்பட்த்தின் மோஷன் போஸ்டரை இங்கே பாருங்கள்:

ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவாசரலா ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர் மைக்கேல் மேட்சன் (Michael Madsen) இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.  

"நான் இதுவரை நடித்த எல்லாவற்றையும் ஒப்பிடும்போது சாக்ஷி கதாபாத்திரம் முற்றிலும் புதியது" என்று அனுஷ்கா ஷெட்டி கூறினார். "என்னுடய வழக்கமான நிலையில் இருந்து வெளிவந்து நான் நடித்த இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்துள்ளது. மாதவனுடன் மீண்டும் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த திரைப்படம் என்றும் நிலைத்து நிற்கும். சுப்பராஜு, அவாசராலா சீனிவாஸ், அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி, இயக்குனர் ஹேமந்த் மதுகர், விவேக் குச்சிபோட்லா, டிஓபி ஷானில் தியோ மற்றும் நிசப்தம் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எங்கள் ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநர்களும் குழுவினரும் நன்றி. ஒரு குழுவாக நாங்கள் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இந்தத் திரைப்படத்தை கொண்டு வர எதிர்பார்க்கிறோம். உலகளவில் உள்ள அனைவரையும் சென்றடைய எங்களுக்கு உதவிய அமேசானுக்கு நன்றி ” என்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார் மாதவன்.

“த்ரில்லர் திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருப்பதையும், பார்ப்பதையும் நான் ரசிக்கிறேன். நிசப்தம் என்னுடைய மிகவும் சுவாரஸ்யமான திரைப்படங்களில் ஒன்றாகும், ”என்று கூறி மாதவன் சிலாகிக்கிறார்.

Trending News