மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய இந்த விசாரணையில் இதுவரை மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், உயர் அதிகாரிகள் உட்பட 154 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தொடர்ந்து, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடம் விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று ஆணையத்தின் முன்பு இளவரசி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்று வந்த இளவரசி, சிகிச்சையின்போது, அவரை ஓரிரு முறை மட்டுமே பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாகவே பார்த்ததாகவும் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | சமாதானம் ஆனார் ஓபிஎஸ்? அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து!


மேலும், கடந்த 1992ஆம் ஆண்டு தனக்கு அறிமுகமான ஜெயலலிதா, தன்னிடம் குடும்பம் தொடர்பான விஷயங்களை மட்டுமே பகிர்ந்துகொண்டுள்ளார் எனவும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து என்னிடம் எதுவும் பேசியது இல்லை எனவும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் நான் சிறைக்கு சென்றபோது, அவர் மிகுந்த உடல் நலக் குறைவால் அவதிப்பட்டார் எனவும்,  மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் எனவும் இளவரசி கூறியுள்ளார்.


மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின் போதும் ஜெயலலிதா உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே அவருடன் இருந்தாகவும் இளவரசி கூறியுள்ளார். 


மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்டில் இடம்பெறாத 12 முக்கிய அம்சங்கள்: பட்டியலிட்ட ஓபிஎஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR