தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினைத் தொடரும் பொருட்டு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புச் சான்றிதழ்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, 8-ம் வகுப்பு பயின்று ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2 ஆண்டுகள் தொழிற்படிப்பில் தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 8-ம் வகுப்பு பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் ஒருங்கே பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ட்ரக்கிங், பாராசூட் போன்ற சாகசச் சுற்றுலா விரைவில் தமிழகத்தில் அறிமுகம் - சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்



அதே போல் 10-ம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான கல்விச்சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் இனி குரூப்-4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எழுதவும், 11-ம் வகுப்பு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றில் சேர்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ரூ100ஐ தாண்டிய தக்காளி விலை - என்ன காரணம்?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR